ஸ்ரீ ஆசார்ய சுவாமிகளின் பீடரோகன ஜெயந்தி மஹோத்சவம் - 23 மார்ச் 2013 - சென்னை
பூஜ்யஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சங்கராசார்ய சுவாமிகளின் பீடரோகன ஜெயந்தி மஹோத்சவம் சென்னை தி நகர் கிருஷ்ண சபாவில் 23 மார்ச் 2013 அன்று நடந்தது.
பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய சுவாமிகளின் முன்னிலையிலும் பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய சுவாமிகளின் முன்னிலையிலும் மஹோத்சவ விழா நடைபெற்றது ஸ்ரீ உதயலூர் கல்யாணராமனின் நாமசங்கீர்தனத்துடன் மதியம் 3 மணிக்கு அன்றைய நிகழ்ச்சி துவங்கியது. வேத பண்டிதர்கள் ஸ்வஸ்தி வசனம் வழங்கினர். ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹ பாஷணம் வழங்கினார். தலைமை விருந்தினர் சொற்பொழிவாற்றினார். புகழ்மிக்க ஐந்து மூத்த பண்டிதர்களை கௌரவித்தனர். மைத்ரீம் பஜத்த பாடி நிகழ்ச்சி நிறைவடைந்தது
பல்வேறு பக்தர்கள் மஹோத்சவ விழாவில் கலந்து கொண்டு பூஜ்யஸ்ரீ ஆசார்ய சுவாமிகளின் அணுகிரஹத்தை பெற்றனர்.